இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

200 கி.மீ ‘உடல் தகுதி இந்தியா நடைபோட்டி’ மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ தொடக்கம்

Posted On: 29 OCT 2020 4:53PM by PIB Chennai

ராஜஸ்தான் ஜைசல்மர் பகுதியிருந்து அக்டோபர் 31ம் தேதி 200 கி.மீ உடல் தகுதி இந்தியா நடை போட்டியை, பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வாலுடன் இணைந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியை, இந்தோ திபெத் எல்லை போலீஸ் அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை 3 நாட்கள் நடத்துகிறது. இதில் மத்திய ஆயுதப்படை போலீசார் பங்கேற்கின்றனர். 

இரவு, பகலாக நடைபெறும் இந்த நடை பயணம், இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய தார் பாலைவனத்தை கடந்து செல்கிறது.

இந்நிகழ்ச்சி குறித்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, ‘‘உடல் தகுதி இந்தியா இயக்கத்தை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பது பிரதமரின் அழைப்பு. இந்த தனிச்சிறப்பான நடைபோட்டி மூலம், உடல் தகுதியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்க  நமது பாதுகாப்பு படை வீரர்கள் ஒன்றிணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஜைசல்மரில் தொடங்கும் நடைபோட்டியில் நான் கலந்து கொள்வேன். உடல் தகுதி இந்தியா இயக்கத்தை, நாட்டின் அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்வது, விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் முக்கிய முயற்சி ’’ என்றார்.

நடிகர் வித்யுத் ஜாம்வால் கூறுகையில், ‘‘உடல் தகுதி இந்தியா நடைபோட்டி மூலம், உடல் தகுதியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.   இந்தப் போட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூவுடன்  இணைந்து தொடங்கி வைப்பதையும், உடல் தகுதியை பரப்புவதில் நமது வீரர்களுடன் இணைந்து செயல்படுவதையும் கவுரவமாகக் கருதுகிறேன்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668441

**********************



(Release ID: 1668639) Visitor Counter : 144