குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

திரு கேசுபாய் பட்டேல் மறைவிற்கு குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2020 4:27PM by PIB Chennai

குஜராத் முன்னாள் முதலமைச்சர் திரு கேசுபாய் பட்டேலின் மறைவிற்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "குஜராத் முன்னாள் முதலமைச்சர் திரு கேசுபாய் பட்டேலின் மறைவுச் செய்தி மிகவும் கவலை அளிக்கிறது.

அவர், ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு சேவை புரிவதில் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மிகவும் பிரபலமான தலைவர். விவசாய குடும்பத்தில் இருந்து வந்த அவர், விவசாயிகளின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். அவர்களின் நல்வாழ்வுக்காக அரும்பாடு பட்டதுடன், விவசாயத்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் அதிக அக்கறை செலுத்தினார். விவசாயிகளும் ஊரக இந்தியாவும் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன.

தமது கடுமையான உழைப்பு, எளிமை மற்றும் திறமையான தலைமைப் பண்பால், அவர் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக உயர்வு பெற்றார். முதல்வராக உயர்ந்த பின்பும், அவர் எளிமையாகவும் அனைவராலும் எளிதில் அணுகக்கூடியவருமாக விளங்கினார்.

அவரது மறைவின் மூலம் நாடு ஒரு மிகப்பெரிய தலைவரை இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி!" என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668418

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1668623) வருகையாளர் எண்ணிக்கை : 170
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati