குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

ஊழல் தடுப்புக் கண்காணிப்பு வாரம் தேசிய சிறு தொழில்கள் கழகத்தால் அனுசரிக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 28 OCT 2020 5:30PM by PIB Chennai

ஊழல் தடுப்புக் கண்காணிப்பு வாரம் அனுசரிக்கப்படுவதன் ஒரு பகுதியாக, "நிறுவனங்களுக்கான நேர்மை உறுதிமொழியை" தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு விஜயேந்திரா அனைவரையும் ஏற்க செய்தார். மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ்  தேசிய சிறு தொழில்கள் கழகம் செயல்படுகிறது.

தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் இயக்குநர் (திட்டமிடுதல் மற்றும் சந்தைப்படுத்துதல்) திரு பி உதயகுமார், இயக்குநர் (நிதி) திரு கௌரங்க் தீட்சித், தலைமை கண்காணிப்பு அதிகாரி திரு ராஜன் திரேஹான் மற்றும் இதர பணியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பொதுமக்களின் பங்களிப்பின் மூலம் பொது வாழ்வில் நேர்மை மற்றும் நாணயத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் உறுதியை இந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு வார நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது.

கொவிட்-19 தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றும்படியும், இந்த வருடத்தின் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு வாரத்தை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய தூய்மை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறும் அனைத்து பணியாளர்களும் அறிவுறுத்தப்பட்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668155

********

(Release ID: 1668155)


(रिलीज़ आईडी: 1668322) आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Telugu