எரிசக்தி அமைச்சகம்
ஜப்பான் நாட்டின் நிதி நிறுவனத்துடன் 50 பில்லியன் ஜப்பான் யென் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் இணைந்தது என்டிபிசி நிறுவனம்
प्रविष्टि तिथि:
28 OCT 2020 4:53PM by PIB Chennai
தேசிய அனல் மின் நிறுவனமான என்டிபிசி, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியுடன் 50 பில்லியன் ஜப்பான் யென் மதிப்பிலான (சுமார் ரூபாய் 3582 கோடி) அயல்நாட்டு கடன் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி 60 சதவிகித நிதியை சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியும், மீதமுள்ள தொகையை அந்த வங்கியின் உத்தரவாதத்துடன் அந்நாட்டின் வணிக வங்கிகளும் வழங்கும்.
சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்த நிதி வழங்கப்படும். மத்திய மின்சார அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668137
**********************
(रिलीज़ आईडी: 1668178)
आगंतुक पटल : 291