ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 27,500 மெட்ரிக் டன்கள் உரம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தடைந்தது

Posted On: 28 OCT 2020 1:46PM by PIB Chennai

ஃபெர்டிலைசர்ஸ் அன்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் (ஃபேக்ட்) நிறுவனம் இறக்குமதி செய்த மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் என்னும் உரத்தை தாங்கிய மூன்றாவது கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தை திங்களன்று வந்தடைந்தது.

விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 27,500 மெட்ரிக் டன்கள் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சரக்கை இறக்கி மூட்டைகளில் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் மூலம், இந்த வருடத்தில் 82,000 மெட்ரிக் டன்கள் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இறக்குமதி ஆர்டர்களை  ஃபேக்ட் நிறுவனம் செய்திருந்தது.

மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ஃபேக்ட்-இன் முக்கிய தயாரிப்பான  ஃபேக்டம்பாஸ் மற்றும் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் ஆகியவை இணைந்த உரக்கலவையை தென்னிந்திய விவசாயிகள் மிகவும் விரும்புகிறார்கள்.

இந்த ஆண்டில் இன்னும் இரண்டு 'பார்சல்களை' கொண்டு வர இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, காரிப் பருவத்தில் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு கப்பல்களில் மியூரியேட் ஆஃப் பொட்டாஷையும், ஒரு தொகுப்பு என் பி கே-வையும் ஃபேக்ட் இறக்குமதி செய்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668085

******

(Release ID: 1668085)



(Release ID: 1668109) Visitor Counter : 183