ஜல்சக்தி அமைச்சகம்

லடாக்கில் குடிநீர் திட்ட பணிகள்: ஜல் சக்தி அமைச்சகம் ஆய்வு

Posted On: 27 OCT 2020 3:59PM by PIB Chennai

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும், ஜல் ஜீவன் திட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, ஜல் சக்தி அமைச்சகம் காணொலி காட்சி மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் லடாக் பகுதியில், ஜல் ஜீவன் திட்ட பணிகள் குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டது.

லடாக்கில் 191 கிராம பஞ்சாயத்துகளில், உள்ள 288 கிராமங்களில் 1,421 குடியிருப்புகள் உள்ளன. இங்கு  சுமார்  44,082 கிராம வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு 2022ம் ஆண்டுக்குள், 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது.  இதற்கு லடாக் யூனியன் பிரதேசம், தற்போதுள்ள குடிநீர் விநியோக கட்டமைப்பை லடாக் யூனியன் பிரதேசம் பயன்படுத்த வேண்டியுள்ளது. லடாக்கில் 254 கிராமங்களில் குடிநீர் விநியோக முறை உள்ளது.  இவற்றை அதிகரித்து மீதமுள்ள வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பை வழங்க லடாக் அரசு பணியாற்றி வருகிறது.

லடாக்கில் ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்த ரூ.352.09 கோடி 2020-21ம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667834

**********************(Release ID: 1667986) Visitor Counter : 127