சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19-க்கு எதிரான போரில் இந்தியா தற்சார்பு அடைந்துள்ளது: டாக்டர் ஹர்ஷ் வர்தன்
प्रविष्टि तिथि:
26 OCT 2020 10:31PM by PIB Chennai
கொவிட்-19-க்கு எதிரான போரில் பத்தாவது மாதத்துக்குள் நுழைந்துள்ள இந்தியா, பல்வேறு விஷயங்களில் தற்சார்பு அடைந்துள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கொவிட்-19-க்கு எதிரான நாடு தழுவிய பிரச்சாரத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நடவடிக்கைகளை பாராட்டிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், தனது 10,000 கிளைகளின் மூலம் நாட்டில் உள்ள 662 மாவட்டங்களில் சுமார் 10 லட்ச முகக் கவசங்கள் அந்த வங்கி வழங்கி உள்ளதாக கூறினார்.
500 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு சிறப்பு வசதிகளை அளிப்பதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2020 அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் கிராம் சம்பர்க் யோஜனா என்னும் திட்டத்தையும் அவர் பாராட்டினார்.
"கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பங்களை 74-ஆவது சுதந்திர தினத்தின்போது பஞ்சாப் நேஷனல் வங்கி கௌரவித்தது. ராணுவத்தினர் மீது வங்கி வைத்துள்ள மரியாதையை இந்த செயல் காட்டுகிறது," என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1667699
*******
(Release ID: 1667699)
(रिलीज़ आईडी: 1667734)
आगंतुक पटल : 249