பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டாக்டர் திரு மெர்க் எஸ்பெருடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இருநாட்டு உயரதிகாரிகள் அளவிலான கூட்டத்தில் சந்திப்பு; பெக்கா ஒப்பந்தத்தில் இருநாடுகளும் விரைவில் கையெழுத்து
Posted On:
26 OCT 2020 7:24PM by PIB Chennai
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் மார்க் டி எஸ்பெர், 2+2 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவரை புதுடெல்லியில் இன்று சந்தித்து பேசினார். ராணுவத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம், ராணுவ வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆய்வு செய்தனர்.
இரு நாடுகளும் தத்தமது ஆயுத படைகளுக்கு இடையேயான தொடர்பு குறித்து திருப்தி தெரிவித்தனர். கொரோனா தொற்று பரவல் காலத்தில் ராணுவத்தின் செயல்பாடு குறித்தும் குறிப்பாக ராணுவ ஒத்துழைப்புக் குழு சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையே அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் பெக்கா ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்த இரு தலைவர்களும், அமெரிக்கச் செயலாளரின் தற்போதைய பயணத்தின்போது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளனர்.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை விரிவாக எடுத்துக் கூறிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது இந்தியாவில் நிலவிவரும் பாதுகாப்புத் தொழிலுக்கு உகந்த சூழ்நிலை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667651
**********************
(Release ID: 1667690)
Visitor Counter : 294