மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
அருணாச்சலப் பிரதேச என் ஐ டி-யில் மூன்று கட்டிடங்கள் மற்றும் இதர வசதிகளை மத்திய கல்வி அமைச்சர் மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2020 7:18PM by PIB Chennai
இயந்திர பொறியியல் கட்டிடம், வேதிப் பொறியியல் கட்டிடம் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் கட்டிடம் ஆகியவற்றையும், நூலகம் உள்ளிட்ட இதர வசதிகளையும் அருணாச்சலப் பிரதேச தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என் ஐ டி) மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார்.
அருணாச்சலப் பிரதேச முதல்வர் திரு பேமா காண்டு, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு மற்றும் சிறுபான்மையினர் நல இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ, அருணாச்சலப் பிரதேச கல்வி அமைச்சர் பொறியாளர் தாப தெடிர், என் ஐ டி அருணாச்சலப் பிரதேச இயக்குநர் பேராசிரியர் பிநாகேஸ்வர் மகந்தா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர், அறிவியல் குறித்த ஆர்வத்தை மாணவர்களின் மனங்களில் நமது கல்வி நிறுவனங்கள் விதைக்க வேண்டும் என்றும், அறிவின் களஞ்சியமாக அவை சேவை புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
எந்தவிதமான சவாலை எதிர்கொள்வதற்கும் இளைஞர்களை நமது கல்வி நிறுவனங்கள் தயார் படுத்த வேண்டும். சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் திறனை அவர்களுக்கு அளித்து, அவர்களை சிறந்த மனிதர்களாக கல்வி நிறுவனங்கள் மாற்ற வேண்டும் என்று திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மேலும் கூறினார்.
கல்வி அமைச்சகத்தின் முயற்சிகளைப் பாராட்டிய திரு கிரண் ரிஜிஜூ, தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியதும், ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஒட்டுமொத்த கல்வி அமைப்பை மேம்படுத்த கல்வி அமைச்சகம் எடுத்து வரும் நடவடிக்கைகளும் சிறப்பானவை என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667648
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1667686)
வருகையாளர் எண்ணிக்கை : 121