ஜல்சக்தி அமைச்சகம்

மேகாலயாவில் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயல்படுத்தப்படுதல் குறித்த இடைக்கால ஆய்வு நடைபெற்றது

Posted On: 26 OCT 2020 6:05PM by PIB Chennai

ஜல் ஜீவன் இயக்கம் மேகாலயாவில் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை குறித்து அம்மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் தேசிய ஜல் ஜீவன் இயக்கக் குழுவினருக்கு காணொலி மூலம் இன்று எடுத்துக் கூறினார்கள்.

மேகாலயாவில் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயல்படுத்தப்படுதல் குறித்த இடைக்கால ஆய்வு கூட்டத்தில் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த விளக்கம் மத்திய குழுவினருக்கு அளிக்கப்பட்டது. 

மேகாலயாவில் உள்ள 5.89 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு 2020-21-க்குள் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2020-21-க்குள் 1,636 கிராமங்களை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளதாக இடைக்கால ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டது. இது வரை 112 கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கிராம அளவில் திட்டமிடும் போது அதிக அளவில் கவனம் செலுத்துமாறும், ஒவ்வொரு கிராமத்துக்கும் செயல் திட்டத்தை தயாரிக்குமாறும் மாநிலத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

 

2024-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதை ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல்

ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667617

**********************



(Release ID: 1667639) Visitor Counter : 97