தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

உத்தரப்பிரதேசத்தின் பரேலியில்100 படுக்கைகள் கொண்ட புதிய இஎஸ்ஐசி மருத்துவமனைக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் திரு கங்குவார் பங்கேற்பு; புனித நாளான தசராவன்று அப்பகுதி மக்களுக்கு ஓர் பரிசு

Posted On: 26 OCT 2020 4:22PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் உள்ள 100 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய இஎஸ்ஐசி மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்குவார் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உயர் சிகிச்சைக்காக இதுவரை டெல்லி எய்ம்ஸ் அல்லது லக்னோவில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று வந்த பயனாளிகள் இந்த இஎஸ்ஐசி மருத்துவமனை தொடங்கப்பட்ட பின் பெரிதும் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார்.

இந்த மருத்துவமனையில் சாமானிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் மாதிரி மருத்துவமனையாக இது மாறும் என்றும் அவர் கூறினார்.

 

ரூபாய் 90 கோடி மதிப்பில் 4.67 ஏக்கர் நிலத்தில் இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதன் வாயிலாக பரேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் தொழிலாளர் ஈட்டுறுதி (இஎஸ்ஐ) உறுப்பினர்கள் பயனடைவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667591

**********************



(Release ID: 1667605) Visitor Counter : 126