நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
வெங்காய விலையை குறைப்பதற்கும், வெங்காயத்தை தாராளமாக மக்களுக்கு கிடைக்க செய்வதற்கும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Posted On:
23 OCT 2020 4:57PM by PIB Chennai
செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை குறைப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தேவைப்படும் நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுப்பதற்காக நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தால் வெங்காய விலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) சட்டத்தின் படி, அதிகபட்ச வெங்காய கையிருப்பாக மொத்த வியாபாரிகளுக்கு 25 மெட்ரிக் டன்களும், சில்லரை வர்த்தகர்களுக்கு 2 மெட்ரிக் டன்களும் 2020 டிசம்பர் 31 வரை அனுமதிக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020 செப்டம்பர் 14 அன்று வெங்காய ஏற்றுமதிகளை அரசு தடை செய்தது.
உள்நாட்டு நுகர்வோர்களுக்கு வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதோடு, ராபி-2020 பருவ வெங்காய சேமிப்பை அதிகப்படுத்தவும் அரசு முடிவெடுத்தது.
மேலும், வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. மேற்கண்டவை வெங்காய விலையை குறைப்பதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகளில் சிலவாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667049
----
(Release ID: 1667116)
Visitor Counter : 250
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam