ஆயுஷ்

இயற்கை மூலிகைகளுக்கான தேவையை உலகெங்கும் கொவிட் அதிகரித்துள்ளது

Posted On: 22 OCT 2020 6:11PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் மண்டல மூல மருந்துக் களஞ்சியத்தை மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இயற்கை மருத்துவ மற்றும் மூலிகை பொருட்களுக்கான தேவை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அஸ்வகந்தா, கிலோய், துளசி, காள்மேக், மூலேதி ஆகிய முக்கிய மூலிகைககளுக்கான தேவையை கொவிட் மேலும் அதிகரித்துள்ளது.

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் மருத்துவத் தாவரங்களைப் பயிரிடுவதில் மண்டல மூல மருந்துக் களஞ்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவத் தாவர வாரியத்துடன் இணைந்து, ஆயுஷ் அமைச்சகம், தேசிய மூல மருந்துக் களஞ்சியத்தையும், மண்டல மூல மருந்துக் களஞ்சியங்களையும் உருவாக்கியுள்ளது.

மூல மருந்துகளைப் பாதுகாக்கவும், ஆவணம் செய்யவும், புது தில்லியில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் களஞ்சியம் வழி வகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666814

----



(Release ID: 1666859) Visitor Counter : 225