ஜல்சக்தி அமைச்சகம்

திரிபுராவில் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த இடைநிலை ஆய்வுக் கூட்டம்

Posted On: 22 OCT 2020 4:36PM by PIB Chennai

மத்திய ஜலசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஜல்ஜீவன் இயக்கம் என்ற மத்திய அரசின் திட்டமானது, வரும் 2024ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து ஜலசக்தி அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த வகையில், திரிபுரா மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்த இடை நிலை அறிக்கை தேசிய ஜல் ஜீவன் இயக்கத்திடம் இன்று வழங்கப்பட்டது. இதன்படி திரிபுராவில் மொத்தம் உள்ள 8.01 லட்சம் வீடுகளில் 1.16 லட்சம் (14%) வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 2023ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க அம்மாநிலம் திட்டமிட்டுள்ளது. 2020- 21 ஆண்டில் இந்த மாநிலத்தில் 3.20 லட்சம் தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 44000 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் 50000 இணைப்புகள் வழங்கவும், இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1500 இணைப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பைஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666785

------


(Release ID: 1666830) Visitor Counter : 153