நிதி அமைச்சகம்

கணக்கில் காட்டப்படாத பணம் பீகாரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை

Posted On: 21 OCT 2020 6:39PM by PIB Chennai

பீகார் மாநிலத்தின் புர்னியா மற்றும் சகர்ஷா பகுதியைச் சேர்ந்த இரண்டு அரசு ஒப்பந்ததாரர்கள், பகல்பூரைச் சேர்ந்த பட்டு வியாபாரி  ஆகியோர் தங்கள்  வருமானத்துக்கு உரிய கணக்குகளை சமர்பிக்காமல், பல தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்களின் அலுவலகங்கள் மட்டும் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 19ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது தொழிலாளர்கள் கூலி, போக்குவரத்து மற்றும் எரிபொருள் செலவு ஆகியவற்றை மேற்கொண்டதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. பல்வேறு நபர்களின் பெயர்களில் உள்ள வங்கி கணக்குகளிலிருந்து அவர்கள் பணம் எடுத்துள்ளதும், பெயர் குறிப்பிடப்படாமல், கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகளும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.  இதுதவிர ஏராளமான போலி ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத பணம் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.  ரூ.2.40 கோடி மதிப்பில் ரொக்க பணம், நகை, நிரந்தர வைப்பு நிதி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666503


(Release ID: 1666683) Visitor Counter : 170