பாதுகாப்பு அமைச்சகம்

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான ஐஎன்ஸ் கவராட்டி போர்க்கப்பல் கடற்படையில் இணைகிறது

Posted On: 21 OCT 2020 7:07PM by PIB Chennai

ஐஎன்எஸ் கவராட்டி போர்க்கப்பல் கடற்படையில் அக்டோபர் 22ம் தேதி சேர்க்கப்படுகிறது.

நீர்மூழ்கி கப்பல்களை ரகசியமாக தாக்கி அழிக்கும் கமோர்தா வகையைச் சேர்ந்த 4 சிறிய போர்க்கப்பல்கள்  உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டன. இவற்றில் கடைசி போர்க் கப்பலான ஐஎன்ஸ் கவராட்டி, கடற்படையில் அக்டோபர் 22ம் தேதி இணைக்கப்படுகிறது. விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெறும் விழாவில், இந்த போர்க்கப்பலை, ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே இணைத்து வைக்கிறார்.

ஐஎன்எஸ் கவராட்டி போர்க் கப்பலை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியரிங் என்ற நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலில் உள்ள 90% உபகரணங்கள் உள்நாட்டில் தயாரானது. இதில் உள்ள ஆயுதங்களும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரானவை. இதன் மூலம் தற்சார்பு இந்தியாவுக்கு சான்றாக ஐஎன்எஸ் கவராட்டி போர்க்கப்பல் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666543

 


(Release ID: 1666682) Visitor Counter : 270