தேர்தல் ஆணையம்
வேட்பாளர்கள் செலவு வரம்பை அதிகரிக்க தேர்தல் ஆணையம் குழு அமைத்துள்ளது
Posted On:
21 OCT 2020 7:09PM by PIB Chennai
தற்போதைய சூழலுக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்கு வரம்பை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு செய்ய இரண்டு பேர் கொண்ட குழுவை இந்திய தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
வருமானவரித்துறை முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி மற்றும் புலனாய்வு அதிகாரியுமான திரு.ஹரிஷ் குமார், பொதுச்செயலாளர் மற்றும் டிஜி(செலவினங்கள்) திரு. உமேஷ் சின்ஹா ஆகியோரைக் கொண்ட குழுவை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, செலவு பணவீக்க குறியீடு மற்றும் இதர அம்சங்கள் குறித்து ஆராய்ந்து ஒரு வேட்பாளர் செலவு செய்யக் கூடிய வரம்பை நிர்ணயிப்பது குறித்து இந்த குழு ஆராயும்.
கொவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு, 1961ம் ஆண்டின் தேர்தல் நடத்துவதற்கான 90-வது விதியில் மத்திய சட்டம்& நீதித்துறை கடந்த 19-ம் தேதி ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி தேர்தல் செலவினம் 10% அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 10% உயர்வு இப்போது நடைபெற்று வரும் தேர்தல்களில் உடனடியாக அமலுக்கு வருகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவின வரம்பு என்பது 28-02-2014-ம் ஆம் தேதி அறிவிப்பில் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு திருத்தப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் கடந்த 10.10.2018-ம் தேதி வெளியிட்டப்பட்ட அறிக்கையில் அதிகரிக்கப்பட்டது.
வாக்காளர் எண்ணிக்கை 834 மில்லியனில் இருந்து 2019-ம் ஆண்டு 910 மில்லியனாக அதிகரித்தது. இப்போது இது 921 மில்லியனாக அதிகரித்திருக்கிறது. தவிர இதே காலகட்டத்தில் செலவு பணவீக்க குறியீடு 220-ல் இருந்து 2019-ம் ஆண்டு 280 ஆக அதிகரித்து, இப்போது 301 ஆக அதிகரித்திருக்கிறது. எனினும், கடந்த ஆறு ஆண்டுகளாக தேர்தல் செலவினம் அதிகரிக்கப்படவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666540
(Release ID: 1666681)