அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உள்நாட்டில் சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்கும் இலக்கை நோக்கி நடைபோடும் இந்தியா

Posted On: 21 OCT 2020 5:14PM by PIB Chennai

சொந்தமாக உள்நாட்டிலேயே சூப்பர் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் திறனை முன்னெடுக்கும் வகையில் சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பதற்கான வசதிகளை இந்தியா வேகமாக விரிவு படுத்தி வருகிறது.

மருந்து கண்டுபிடிப்பு, மரபியல், வெள்ள முன்னெச்சரிக்கை, எண்ணைய் வள ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், குறுசிறுநடுத்தர தொழில்நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்களுக்கு அதிக திறன் வாய்ந்த கம்ப்யூட்டர்கள் தேவைப்படுகின்றன. எனவே இந்த தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு கட்டங்களாக அதிக சக்தி கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரை விரைவாக உருவாக்கும் பணிகளை தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங்க் இயக்கம்(என்எஸ்எம்) ஊக்குவித்து வருகிறது.

அதன்படி என்எஸ்எம் முதல் கட்டத்தில் திடமிடப்பட்ட கட்டமைப்புகள் ஏற்கனவே நிறுவப்பட்டு விட்டன. பெரும்பாலான இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் கொண்ட இணைப்பு விரைவில் சுமார் 16 பெட்டாஃப்ளாப்ஸ்(பிஎஃப்) என்ற வேகத்தை அடையும். மூன்றாவது கட்டம் வரும் 2021ம் ஆண்டு ஜனவரியில் முன்னெடுக்கப்படும். அப்போது கம்ப்யூட்டர் வேகமானது சுமார் 45 பெட்டாஃப்ளாப்ஸ் என்ற வேகத்தில் அதிகரிக்கப்படும்.

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறை மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவை கூட்டாக இணைந்து என்எஸ்எம் பணிகளை முன்னெடுக்கின்றன. இதனை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம்(ஐஐஎஸ்சி) மற்றும் புனேவில் உள்ள உயர்தர கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம்(சி-டாக்) ஆகியவை அமல்படுத்துகின்றன.

பரம் சிவே என்ற முதலாவது சூப்பர் கம்ப்யூட்டர் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஐஐடி(பிஎச்யு)-யில் நிறுவப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பரம் சக்தி, பரம் பிரம்மா ஆகிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் முறையே ஐஐடி கோரக்பூர், புனே ஐஐஎஸ்இஆரில் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666447


(Release ID: 1666678) Visitor Counter : 316