இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        விளையாட்டு வீரர்கள் பயிற்சி மையங்களுக்கு திரும்புவதற்கான பயணத்தை இந்திய விளையாட்டு ஆணையம் ஏற்பாடு செய்யும்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                21 OCT 2020 6:47PM by PIB Chennai
                
                
                
                
                
                
                டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு, நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையங்களில் பயிற்சிகள் மீண்டும் தொடங்கப்பட இருக்கின்றன
தற்போதைய கொவிட்-19 நிலைமையின் காரணமாகவும் வைரஸிடம் இருந்து விளையாட்டு வீரர்களை பாதுகாக்கவும், பயிற்சிகள் நவம்பர் 1-இல் இருந்து மீண்டும் தொடங்குவதால் பயிற்சியாளர்கள் பல்வேறு பயிற்சி மையங்களுக்கு திரும்புவதற்கான பயணத்தை இந்திய விளையாட்டு ஆணையம் ஏற்பாடு செய்யும். 
மேலும், பயிற்சி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்களுக்கு தங்குமிட வசதிகளை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666515
-----  
                
                
                
                
                
                (Release ID: 1666607)
                Visitor Counter : 147