பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

இந்திய பொது நிர்வாக நிறுவனமான ஐஐபிஏவின் 317-வது செயற்குழு கூட்டத்தில் அதன் புதிய தலைவராக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை ஏற்பு

प्रविष्टि तिथि: 21 OCT 2020 6:02PM by PIB Chennai

இந்திய பொது நிர்வாக நிறுவனமான ஐஐபிஏவின் 317-வது செயற்குழு கூட்டத்தில் அதன் புதிய தலைவராக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த முன்னாள் ஆளுநரும், முன்னாள் இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளருமான திரு டி என் சதுர்வேதி, கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி உயிரிழந்ததை அடுத்து இந்த பதவி காலியாக இருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் முயற்சியால் கொவிட் பரவல் காலத்திலும் பாடத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் டிஜிட்டல் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு இணைய வகுப்புகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். முழு ஊரடங்கின் போதும் அதற்குப் பிந்தைய காலத்திலும் இந்திய பொது நிர்வாக நிறுவனம், பல்வேறு சேவைத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 14 ஆன்லைன் பயிற்சிகள் நடத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் கொவிட்டினால் ஏற்பட்ட இடர்பாடுகளையும் பொருட்படுத்தாமல் கடந்த ஓராண்டில் 62 ஆராய்ச்சித் திட்டங்கள் முடிவடைந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666485

----


(रिलीज़ आईडी: 1666597) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu