ஜல்சக்தி அமைச்சகம்

நாடு முழுவதும் உள்ள 34.64 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்பாசனம் அளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன: ஜல்சக்தி அமைச்சர்

Posted On: 21 OCT 2020 4:52PM by PIB Chennai

பிரதமர் கிருஷி சிஞ்சாயி யோஜனா- துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன நலத் திட்டத்தின் (PMKSY-AIBP) கீழ் செயல்படுத்தப்படும் பணிகளின் புவிசார் குறியீட்டுக்கான கைபேசி செயலியை மத்திய ஜல்சக்தி மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா இன்று அறிமுகப்படுத்தினார்.

ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்க துறையினால் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

காணொலி மூலம் கைபேசி செயலியை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய அமைச்சர், 2016-17 ஆம் ஆண்டில், மாநில அரசுகளோடு ஆலோசித்த பிறகு, செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் 99 முக்கிய/நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்ததாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 34.64 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்பாசனம் அளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன என்று ஜல்சக்தி அமைச்சர் மேலும் கூறினார்.

பணிகள் நடைபெறும் வேகம் மற்றும் திட்டங்களின் நிலைமையை கண்காணிப்பதற்காக, பாஸ்கராச்சாரியா தேசிய வான் செயல்பாடுகள் மற்றும் புவிசார் தகவல்கள் நிறுவனத்தின் உதவியுடன் இந்த செயலியை அமைச்சகம் உருவாக்கி உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666435

-----


(Release ID: 1666570) Visitor Counter : 242