கலாசாரத்துறை அமைச்சகம்
சுபாஷ் சந்திர போஸின் தியாகத்தை குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்: மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங்
Posted On:
21 OCT 2020 2:56PM by PIB Chennai
தில்லி செங்கோட்டையில் இன்று நடைபெற்ற ஆசாத் இந்தி அரசு அமைக்கப்பட்டதன் 77-வது ஆண்டை குறிக்கும் நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் கலந்து கொண்டார்.
ஆசாத் இந்தி அரசு அமைக்கப்பட்டு 77 ஆண்டுகள் கடந்துள்ளதை பெருமையாக நினைவுகூர்ந்த அமைச்சர், நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையை குறித்தும், தன்னிகரில்லா தியாகத்தை குறித்தும் இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணையமைச்சர் தன்னுடைய உரையில் கூறினார்.
அடுத்த வருடம் நாடு தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதோடு, சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளையும் கொண்டாடும் என்றார்.
நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவர், மேற்கண்ட இரு நிகழ்வுகளையும் கொண்டாடும் மைய அமைப்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் இருக்கும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666372
*******
(Release ID: 1666372)
(Release ID: 1666388)