கலாசாரத்துறை அமைச்சகம்

ஸ்ரீநகரில் ‘‘1947 அக்டோபர் 22 நினைவுகள்’’ குறித்த 2 நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நாளை தொடக்கம்

Posted On: 21 OCT 2020 12:12PM by PIB Chennai

‘‘எங்களிடம் இருந்து 150 அடி தொலைவில் எதிரிகள் உள்ளனர். நாங்கள் அதிகளவில் இருக்கிறோம். எங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுகிறது. நான் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டேன்கடைசி வீரரும் கடைசி தோட்டாவும் இருக்கும் வரை போராடுவேன்’’

- மேஜர் சோம்நாத் சர்மா (பரம்வீர் சக்ரா)

‘‘1947 அக்டோபர் 22ம் தேதி நினைவுகள்’’ குறித்த தேசிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள செர்-இ காஷ்மீர் சர்வதேச கருத்தரங்க மையத்தில் தேசிய அருங்காட்சியக நிறுவனம் நடத்துகிறது.   இந்த தேசிய கருத்தரங்கு அக்டோபர் 22 மற்றும் 23ம் தேதி நடக்கிறது. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு பிரகலத் சிங் படேல், காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார்.

 

 இந்திய வரலாற்றில், 1947 அக்டோபர் 22ம் தேதி, துரோகத்தின் சான்றுகள் மற்றும் வீர பாரம்பரியம் என குறிப்பிடப்படுகிறது.  1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு, காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதை பாகிஸ்தான் விரும்பவில்லை. இதனால் 1947ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, பாகிஸ்தான் காஷ்மீருக்குள் ஊடுருவியது. பாகிஸ்தான் ராணுவ உதவியுடன், பாகிஸ்தான் பழங்குடியின தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் புகுந்து பலாத்காரம் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்த ஊடுருவல்தான் இந்தியா-பாகிஸ்தான் போரின் தொடக்கம். அது இன்று வரை தொடர்ந்து நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி, ஜம்மு காஷ்மீர், இந்தியாவுடன் முறைப்படி இணைந்தது. மறுநாள் அக்டோபர் 27ம் தேதி, இந்திய ராணுவ வீரர்கள்  விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர்.  1947ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி முதல், இந்திய ராணுவம் காஷ்மீர் செல்லும் வரையிலான நாட்களில் பயங்கர மோசமான சம்பவங்கள் காஷ்மீரில் நடந்தன. இதில் பலர் உயிரிழந்தனர். காஷ்மீர் மக்கள் பலரும் இதை எதிர்த்து போராடினர்.  

காஷ்மீர் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் சான்றுகள், காஷ்மீர் மக்கள் தைரியத்துடன் போராடியது, இந்திய ராணுவத்தின் வெற்றி ஆகியவை மக்களின் தெரிவிக்கப்பட வேண்டும். இதற்காக இந்த 2 நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஸ்ரீநகரில் நடத்தப்படுகிறது.

இந்த கருத்தரங்கில், முக்கியமான அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். பேராசிரியர்கள், முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள் இதில் உரையாற்றுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666325

*******

(Release ID: 1666325)



(Release ID: 1666360) Visitor Counter : 164