அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19-க்கான மறுபயன்பாட்டு மருந்துகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் குறித்த இணைய தளத்தை டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்
Posted On:
20 OCT 2020 6:50PM by PIB Chennai
தொழிற்சாலைகள், அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் நடத்தி வரும் கொவிட்-19-க்கான மறுபயன்பாட்டு மருந்துகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் பற்றிய இணைய தளத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தொடங்கி வைத்தார்.
கொவிட்-19 மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளின் தற்போதைய நிலைமை பற்றிய தகவல்களை கியூர்ட் (CuRED - CSIR Ushered Repurposed Drugs) எனப்படும் இந்த இணையதளம் கொண்டிருக்கும்.
https://www.iiim.res.in/cured/ அல்லது
http://db.iiim.res.in/ct/index.php என்னும்
முகவரிகளில் இந்த தளத்தை அடையலாம்.
ஆயுஷ்-64 உள்ளிட்ட ஆயுஷ் மருந்துகளின் மருத்துவ பரிசோதனைகளுக்காக ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் பணியாற்றி வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கொவிட்-19க்கு எதிரான போரில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசங்களை அணிதல் மற்றும் இதர முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை மிகவும் அவசியம் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666171
------
(Release ID: 1666256)
Visitor Counter : 179