அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் விழா, தற்சார்பு இந்தியா மற்றும் சர்வதேச நலனுக்கான இந்திய அறிவியல் & தொழில்நுட்ப புதுமைகளின் பிரதிபலிப்பாக இருக்கும்: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 20 OCT 2020 6:53PM by PIB Chennai

2020 டிசம்பர் 22-இல் இருந்து 25 வரை ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் விழா 2020 நடைபெறும். இது குறித்த அறிவிப்பை புது தில்லியில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டமொன்றின் போது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், "முன்னர் நடைபெற்றதை விட பெரிய அளவில், அதே சமயம் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் விழா மெய்நிகர் தளத்தில் நடத்தப்படும்," என்றார்.

தொடர்புடைய அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் ஆதரவோடு இந்திய சர்வதேச அறிவியல் விழா 2020- அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு சபை வழிநடத்தும் என்றார்.

 

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் விழா, தற்சார்பு இந்தியா மற்றும் சர்வதேச நலனுக்கான இந்திய அறிவியல் & தொழில்நுட்ப புதுமைகளின் பிரதிபலிப்பாக இருக்கும் என்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

ஆய்வகங்களை விட்டு அறிவியலை வெளியே கொண்டு வந்து அது குறித்த ஆர்வத்தை இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த விழா உண்டாக்கும் என்று தெரிவித்த அமைச்சர், "சர்வதேச சவால்கள் மற்றும் மக்கள் நலனுக்கான இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பை உலகை பார்க்க வைப்பதற்கான நேரமிது," என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666172

-----



(Release ID: 1666254) Visitor Counter : 214