பாதுகாப்பு அமைச்சகம்
டிஆர்டிஓ அமைப்பின் கொள்முதல் கையேடு 2020-ஐ வெளியிட்டார் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
20 OCT 2020 4:52PM by PIB Chennai
தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஈடுபடும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வின் கொள்முதல் கையேடு 2020-ஐ மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்த புதிய கொள்முதல் கையேட்டினால் உள்நாட்டு ராணுவத் தொழில்துறை எளிமையாக்கப்படுவதுடன், வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அதன் பங்களிப்பை உறுதி செய்யும் என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவான தற்சார்பு இந்தியா திட்டத்தை நனவாக்க இந்தக் கொள்முதல் கையேடு உதவியாக இருக்கும் என்றார் அவர். இந்த திருத்தியமைக்கப்பட்டக் கொள்முதல் கையேடு 2020 தயார் செய்த டிஆர்டிஓ அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதிப் பிரிவுக்கு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666125
----
(Release ID: 1666192)