ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
இஃப்கோ மற்றும் சிக்கிம் அரசின் சிஃப்கோ இடையேயான கூட்டு முயற்சியால் சிக்கிமின் ரங்போ நகரத்தில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்துதல் கட்டிடம் அமைக்கும் பணி துவக்கம்
प्रविष्टि तिथि:
20 OCT 2020 3:29PM by PIB Chennai
இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனமான இஃப்கோ மற்றும் சிக்கிம் இஃப்கோ கரிம நிறுவனம் (சிஃப்கோ) இடையேயான கூட்டு முயற்சியின் பலனாக சிக்கிம் மாநிலத்தின் ரங்போ நகரத்தில் உணவு பதப்படுத்துதல் கட்டிடம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. அடுத்த வருடம் அக்டோபர் மாதம் இந்த பணிகள் நிறைவடைந்து அதன் பிறகு அங்கே உற்பத்தி துவங்கும். 50 கோடி ரூபாய் மதிப்பில் இந்த இரண்டு உணவு பதப்படுத்துதல் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.
மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் முன்னிலையில், சிக்கிம் மாநில முதலமைச்சர் திரு பவன் சிங் தமங், கடந்த ஆண்டு இந்த கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666098
----
(रिलीज़ आईडी: 1666131)
आगंतुक पटल : 230