ஜல்சக்தி அமைச்சகம்

ஜல்ஜீவன் தகவல் தொழில்நுட்ப(ஐசிடி) சவால் போட்டிக்கு அமோக வரவேற்பு

Posted On: 19 OCT 2020 6:23PM by PIB Chennai

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப சவால் போட்டிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

தேசிய ஜல் ஜீவன் திட்டம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்துடன் இணைந்து  மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சவால் போட்டியை தொடங்கியது.  கிராமங்களில் சிறப்பான குடிநீர் சப்ளை மற்றும் கண்காணிப்புக்கு, குறைந்த செலவில் புதுமையான  கருவிகளை கண்டுபிடிப்பதற்காக இந்த சவால் போட்டி நடத்தப்பட்டது. இந்த சவால் போட்டிக்கு விண்ணப்பிக்க கடந்த 12ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த சவால் போட்டிக்கு புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து, 213 திட்டங்கள் வந்துள்ளன.  இவற்றை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் குழு ஆய்வு செய்யவுள்ளது.

சிறந்த கண்டுபிடிப்புக்கு ரூ.50 லட்சமும், அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ.20 லட்சமும் பரிசு வழங்கப்படும்.  சிறந்த கண்டுபிடிப்புகள், சோதனை அடிப்படையில்,  100 கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665865(Release ID: 1666059) Visitor Counter : 33