சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பொது நிதித் திட்டங்களில் வருவாய் ஈட்டும் முறை; ரூ.5011 கோடி முன்பணம் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

Posted On: 19 OCT 2020 7:33PM by PIB Chennai

 டிஓடி எனப்படும் பொதுத்திட்டங்களில் வருவாய் ஈட்டும் முறையின் கீழ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.5011 கோடி  முன்பணம் பெற்றுள்ளது.

மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் இணையம் வழியே நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் திரு.எஸ்.எஸ்.சாந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுங்கசாவடி-செயலாக்கம்-மாற்றுதல்(டிஓடி) மாதிரி என்ற லட்சியத்திட்டத்தின் கீழ் க்யூப் மொபைலிட்டி முதலீடு பிரைவேட் லிமிடெட் (க்யூப் ஹேவேஸ்) நிறுவனத்துக்கு தமிழ்நாடு, பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள 9 சுங்கச்சாவடிகள் அடங்கிய (566 கி.மீ நீளம் கொண்ட) மூன்று டிஓடி தொகுப்புகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியது. அதன் பேரில் முன்பனமாக ரூ.5011 கோடியை நேற்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெற்றது.

சலுகை காலம் 30 ஆண்டுகளாகும். சலுகை உரிமை பெற்ற நிறுவனம், இந்த சலுகை காலத்தில் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலித்து நிர்வகித்து செயல்பட வேண்டும். இது டிஓடி முறையில் வழங்கப்பட்ட இரண்டாவது தொகுப்பாகும். முதல் டிஓடி தொகுப்பில் 10 சுங்கச்சாவடிகள் அடங்கிய 681 கி.மீ தொகுப்பு எம்ஏஐஎஃப் நிறுவனத்திடம் இருந்து ரூ.9681 கோடி முன் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு வழங்கப்பட்டது. பொதுநிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் வருவாய் ஈட்டும் வகையில் மேலும்  பல சாலைகளை டிஓடி தொகுப்பின் கீழ் வழங்க நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665885


(Release ID: 1666020) Visitor Counter : 142