சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகாதமியை உலகத்தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை
Posted On:
19 OCT 2020 7:13PM by PIB Chennai
இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகதாமியை(ஐஏஎச்இ) உலகத்தரத்துக்கு உயர்த்தும் வகையில் மத்திய அமைச்சர் திரு.நிதின்கட்கரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகதாமியின் 5-வது பொதுக்குழுக் கூட்டம் காணொலிகாட்சி முறையில் மத்திய போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் திரு.வி.கே.சிங் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகதாமி கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இதில் நுழைவு/புத்தாக்க பயிற்சிகள்/நெடுஞ்சாலைத்துறையின் சிறப்புப்பகுதிகள் குறித்த பயிற்சிகள் பாலம் மற்றும் சுரங்கபொறியியல்/முன்னேற்றத்திட்டங்கள்/மேலாண்மை வளர்ச்சித்திட்டங்கள்/உத்தி பயிற்சி திட்டங்கள் உள்ளிட்ட பயிற்சிகள் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படுகின்றன.
நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகாதமியை, நெடுஞ்சாலைத்துறை திட்டங்களுக்கு பலன் அளிக்கும் வகையில் மாற்றுவதற்கு அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும் மற்றும் விரிவாக்க வேண்டியதும் அவசியம் என்று கருதப்பட்டது. ஐஏஎச்இ-யை உலகத்தரம் வாய்ந்த பயிற்சி முன்னணி பயிற்சி மையமாக மாற்றுவதற்கு உரிய பரிந்துரைகளை அளிக்க சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலைகள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஒய்.எஸ் மாலிக் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி அளித்த பரிந்துரைகள் குறித்து ஐஏஎச்இ பொதுக்குழு விவாதித்தது. நெடுஞ்சாலைகள்துறை மற்றும் பொது போக்குவரத்துத்துறையில் பயிற்சி, ஆராய்ச்சி பயிற்சி மேம்பாடு, சாலை பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல் ஆகிய மூன்று செயல்பாடுகளின் கீழ் ஐஏஎச்இ-ஐ விரிவாக்குவது குறித்து அளிக்கப்பட்ட பரிந்துரைகள் மீது விவாதம் நடைபெற்றது. சாலைத்துறையில் ஐஏஎச்இ-யை உலகத்தரம் வாய்ந்த மையமாக மாற்றுவதற்கு தேவையான மேல் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665873
(Release ID: 1666017)
Visitor Counter : 225