மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ரூர்கேலாவிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பொன்விழாக் கட்டிடத்தை காணொலிக் காட்சி வாயிலாக மத்திய கல்வி அமைச்சர் திறந்து வைத்தார்
Posted On:
19 OCT 2020 7:31PM by PIB Chennai
ஒடிஷா மாநிலத்தின் ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பொன்விழாக் கட்டிடத்தை காணொலிக் காட்சி வாயிலாக இன்று மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' திறந்து வைத்தார். தேசிய தொழில்நுட்பக் கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டு நிறைவானதை ஒட்டி இந்த கட்டிடத்தைத் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்த தேசிய தொழில்நுட்பக் கழகம், நாட்டின் முக்கிய கல்வி நிறுவனம் என்றும் பல்வேறு தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி வருவதாகவும் கூறினார். தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில்
ரூர்கேலா தேசிய தொழில்நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் 95 கோடி ரூபாய் செலவில் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு இருப்பதாகவும், ரூர்கேலாவின் உயரிய கட்டிடமாக இது விளங்குவதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665884
-----
(Release ID: 1665936)
Visitor Counter : 113