நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

காரிப் சந்தை காலம் 2020-21-ல், குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் செயல்பாடுகள்

Posted On: 18 OCT 2020 4:41PM by PIB Chennai

காரிப் சந்தை காலம் 2020-21, ஏற்கனவே தொடங்கிவிட்டது. முந்தைய பருவத்தில் கொள்முதல் செய்தது போலவே, தற்போதை காரிப் சந்தை காலம் 2020-21-லும்  குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிமிருந்து  அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

தற்போதைய காரிப் சந்தை காலத்தில், நெல் கொள் முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சண்டிகர், கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீரில் சுமூகமாக நடைபெறுகிறது. இங்கு  கடந்த 17ம் தேதி வரை, 7.38 லட்சம் விவசாயிகளிடமிருந்து, 84.45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், சில மாநிலங்கள் தெரிவித்த விருப்பத்தின் அடிப்படையில், இந்த காரிப் சந்தை பருவத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கான, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 41.67 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.  மேலும் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. வெளிச்சந்தை விலை, குறைந்த பட்ச ஆதரவு விலையைவிட குறையும் சூழ்நிலையில், மற்ற மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் விருப்பம் தெரிவித்தால், இதே போன்ற ஒப்புதல்விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும்.

கடந்த 17ம் தேதி வரை, அரசு முகமைகள் மூலம், 723.79 மெட்ரிக் டன் பாசி பருப்பு மற்றும் உளுந்தப் பருப்பு ஆகியவை 723.79 மெட்ரிக் டன் அளவுக்கு ரூ.5.21 கோடி

குறைந்த பட்ச ஆதரவு விலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில், 681 விவசாயிகளிடமிருந்து  கொள்முதல் செய்யப்பட்டன.  இதேபோல், 5089 மெட்ரிக் டன் கொப்பரை, குறைந்தபட்ச  ஆதரவு விலையில், ரூ.52.40 கோடி மதிப்பில்கர்நாடக மற்றும் தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665665

**********************



(Release ID: 1665673) Visitor Counter : 150