அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நாடு முழுவதும் உள்ள தொழில் துறை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் விரைவில் சென்றடையவுள்ளது
Posted On:
17 OCT 2020 4:18PM by PIB Chennai
தொழில் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தங்கள் ஆய்வுகள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ளவும், ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் பொருட்களை மேம்படுத்தவும், நாடெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை விரைவில் பயன்படுத்திக் கொள்ளவிருக்கின்றன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஃபிஸ்ட் என்று அழைக்கப்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியை மறுசீரமைத்து வருகிறது. இதன்படி பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தொழில் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.
தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடையும் முயற்சியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான உள்கட்டமைப்பை, ஆய்வு பணிக்கு மட்டுமல்லாது புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், தொழில்துறையினர் பயன்படும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஃபிஸ்ட் ஆலோசனை வாரியத்தின் தலைவர் டாக்டர் சஞ்ஜய் தாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665467
**********************
(Release ID: 1665530)