இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

7 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள விளையாட்டு மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாக தரம் உயர்த்தப்படுகின்றன

Posted On: 17 OCT 2020 2:21PM by PIB Chennai

நாட்டிலுள்ள மேலும் 7 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு மையங்களை, கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாக தரம் உயர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், சண்டிகர், கோவா, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, திரிபுரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள விளையாட்டு மையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன.

இந்த முடிவு குறித்து பேசிய மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு கிரன் ரிஜிஜு, ஒரே சமயத்தில் விளையாட்டு மையங்களின் அடிமட்ட உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சிறப்பு மையங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அரசு முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறினார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் கனவை நனவாக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகளும் வசதிகளும் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையத்தில் அளிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் விளையாட்டு அமைச்சகம் 14 விளையாட்டு மையங்களை தரம் உயர்த்தி அறிவித்திருந்தது. இப்போது கூடுதலாக 9 மையங்கள் சேர்க்கப்பட்டிருப்பதுடன், மொத்தம் 23‌ மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 24 விளையாட்டு மையங்கள் தரம் உயர்த்தப்பட இருக்கின்றன.

புதுச்சேரியின் உப்பளத்தில் உள்ள ராஜீவ் காந்தி விளையாட்டுப் பள்ளி, ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவில் உள்ள டாக்டர் ஒய் எஸ் ஆர் விளையாட்டுப் பள்ளி உள்ளிட்ட 9 விளையாட்டு மையங்கள் இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள மையங்கள் செயல்பட்டு வரும்

மாநிலங்கள்: அசாம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேகாலயா, சிக்கிம், கர்நாடகா, ஒடிசா, கேரளா, தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், சண்டிகர், கோவா, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா யூனியன் பிரதேசங்கள்: தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665434

**********************


(Release ID: 1665456)