இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

லக்னோ இந்திய விளையாட்டு ஆணையத்தில் மகளிர் மல்யுத்த முகாம் தொடங்கியுள்ள நிலையில் விரிவான சுகாதார மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 16 OCT 2020 6:01PM by PIB Chennai
லக்னோவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் 2020 அக்டோபர் 10 அன்று மகளிர் மல்யுத்த முகாம் தொடங்கியது.
 
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான ஊரடங்கு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டதற்கு பிறகு நடைபெறும் முதல் பயிற்சி முகாம் இதுவாகும்.
 
இந்த முகாம் தொடங்கியுள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரிவான சுகாதார மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
பயிற்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு போட்டியாளர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்திருக்க வேண்டும். டிசம்பர் 31 வரை நடைபெறும் இந்த முகாமில், 16 மல்யுத்த வீரர்களும் 4 உதவி பணியாளர்களும் இடம் பெறுவார்கள்.
 
இவர்கள் அனைவரும் லக்னோவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் குடியிருப்பு பகுதிகளில் தங்குவார்கள்.
 
 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

(रिलीज़ आईडी: 1665451) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Telugu