உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

ஆளில்லாத குட்டி விமானத்தை பயன்படுத்த தேசிய தலைநகர் போக்குவரத்து கழகத்துக்கு அனுமதி

प्रविष्टि तिथि: 16 OCT 2020 5:54PM by PIB Chennai

தில்லி-மீரட் பிராந்திய துரித போக்குவரத்து அமைப்புக்காக இணையம் சார்ந்த புவியியல் தகவல் அமைப்பு (GIS) முறைக்கான விவரணையாக்கம் மற்றும் செயல்படுத்துதலுக்காக ஆளில்லாத குட்டி விமானத்தை பயன்படுத்திக் கொள்ள தேசிய தலைநகர் போக்குவரத்து கழகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தால் தேசிய தலைநகர் போக்குவரத்து கழகத்துக்கு விதிவிலக்கு அளித்து தொலைவில் இருந்து இயக்கப்படும் விமான அமைப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய விமான போக்குவரத்து அமைச்சக இணை செயலாளர் திரு அம்பர் தூபே, "ஆளில்லாத குட்டி விமானத்துக்கான அனுமதி பெற்றதற்காக தேசிய தலைநகர் போக்குவரத்து கழகத்துக்கு வாழ்த்துகள். வான் வழி ஆய்வுக்கும், திட்டத்தை மதிப்பிடுவதற்கும் இது அவர்களுக்கு உதவும்," என்றார்.

"ஆளில்லாத விமானங்களை மக்களின் நன்மைக்காக பயன்படுத்த வெண்டுமென்ற  விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கொள்கையின் படி இந்த அனுமதிகள் அமைந்துள்ளன," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நிபந்தனைகளுடனான இந்த அனுமதி 2020 டிசம்பர் 31 அல்லது டிஜிட்டல் வான் தளம் முழுவதுமாக செயல்படுத்துதல் ஆகிய இரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அது வரை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665180

 

*** 


(रिलीज़ आईडी: 1665447) आगंतुक पटल : 237
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , English , Urdu , हिन्दी , Marathi , Assamese