இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஒய்20 சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய திரு கிரன் ரிஜிஜு, கொவிட்-19-ஐ எதிர்த்து போராட இளைஞர்களை ஒன்று திரட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்

प्रविष्टि तिथि: 16 OCT 2020 5:51PM by PIB Chennai

உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சிந்தனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளை பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒய்20 சர்வதேச மாநாட்டில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு கிரன் ரிஜிஜூ இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.

இந்த வருடத்தின் ஒய்20 சர்வதேச மாநாடு சவுதி அரேபியாவால் ஏற்பாடு செய்யப்பட்டது. கொவிட்-19-ஐ எதிர்த்து போராட இளைஞர்களை ஒன்று திரட்ட வேண்டிய அவசியத்தை திரு கிரன் ரிஜிஜு தன்னுடைய உரையின் போது வலியுறுத்தினார்

இளைஞர்களுக்கான கொவிட்டுக்கு பிந்தைய வாய்ப்புகள் என்னும் தலைப்பிலான அமர்வில் கலந்து கொண்ட திரு ரிஜிஜு, "அதிக அளவிலான இளைஞர்களை கொண்டிருக்கும் நாடான இந்தியா, பெருந்தொற்றை எதிர்கொள்ள அவர்களை சிறப்பாக பயன்படுத்தியுள்ளது," என்றார்.

மேலும் பேசிய அவர், "இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்தின் 6.5 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர் தன்னார்வலர்கள் மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்களத்தில் பணியாற்றி வருகின்றனர்," என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665178

*** 


(रिलीज़ आईडी: 1665446) आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi