அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவரின் கண்டுபிடிப்பு திரவ அணுக் கழிவை பாதுகாப்பாக வெளியேற்ற உதவும்

Posted On: 17 OCT 2020 12:50PM by PIB Chennai

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான ஜவகர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் ஆய்வு மையத்தின் பேராசிரியர் ராஜேஷ் கணபதியின் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள்

திரவ அணுக் கழிவை பாதுகாப்பாக வெளியேற்றும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.

அதிக குளிரூட்டல் மூலம் உருக்கப்பட்ட கண்ணாடியை பளிங்காக மாற்றுவதன் மூலம் திரவ அணுக்கழிவை பாதுகாப்பாக வெளியேற்றலாம் என்று பேராசிரியர் ராஜேஷ் கணபதி தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

ஐ ஐ எஸ் சி பேராசிரியர் அஜய் சூத் மற்றும் அவரது மாணவர் திருமிகு திவ்யா கணபதி ஆகியோருடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆராய்ச்சி நேச்சர் பிசிக்ஸ் எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் ராஜேஷ் கணபதியை

rajeshg@jncasr.ac.in என்னும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 98806 71639 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665417

**********************


(Release ID: 1665443) Visitor Counter : 194