நிதி அமைச்சகம்
உலக வங்கி வளர்ச்சி குழுவின் 102வது கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
Posted On:
16 OCT 2020 7:57PM by PIB Chennai
உலக வங்கி வளர்ச்சிக் குழுவின் 102வது கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் இன்று கலந்து கொண்டார்.
கொவிட் -19 நெருக்கடி மீட்பு நடவடிக்கையில் உலக வங்கி குழுமத்தின் பங்கு: கொவிட் பாதிப்பை அளவிடுவது, உயிர்களை காப்பாற்றுவது, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவது மற்றும் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி குழுவின் குறிப்புகளை புதுப்பிப்பது: கடன் சேவை நிறுத்தி வைப்பு முயற்சியை அமல்படுத்துவது மற்றும் நீட்டிப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய திருமதி. நிர்மலா சீதாராமன், கடந்த ஏப்ரல் மாதத்துக்கு முன்பே தொடங்கிய கொவிட்-19 பாதிப்பு வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இன்று வரை தொடர்வதாக தெரிவித்தார். பல ஆண்டுகள் கடுமையாக போராடி, ஏழைமையின் அளவை குறைத்ததை இழக்கும் அபாயம் தற்போது அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். கொவிட் பரவலை கட்டுப்படுத்தவும், சமூக மற்றும் பொருளாதார பாதிப்பை குறைக்கவும், மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏழைகளுக்கு நேரடி பணி பரிமாற்றம் மற்றும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைளுக்கு முதல் கட்டமாக 23 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை மத்திய அரசு அறிவித்ததாக நிதியமைச்சர் இந்த கூட்டத்தில் தெரிவித்தார். இதையடுத்து பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 271 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியுதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். வர்த்தகர்களுக்கான நிவாரணம் அளிக்கும் திட்டங்கள், தொழிலாளர் துறையில் சீர்திருத்தங்கள், நாடு முழுவதும் பயன்படுத்தும் ரேசன் அட்டைகள் மூலம், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகவம் அவர் கூறினார். நபார்டு நிதியுதவி திட்டம் மூலம் ஊரக துறைக்கு ஆதரவு, விவசாயத்துறையில் 27.17 பில்லியன் டாலர் அளவிலான பணப்புழக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்றவை செய்யப்பட்டதாகவும் மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
கொவிட் -19 தொற்றை முன்னிட்டு, சுகாதார கட்டமைப்புகளை 2.03 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மத்திய அரசு மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும், தெற்க ஆசிய பகுதியில் முக்கிய பங்காற்றவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கொவிட் தொற்றை எதிர்கொள்ள கூட்டு நடவடிக்கை முக்கியம் என குறிப்பிட்ட நிதியமைச்சர் அமைச்சர், இதற்காக இந்த நிதியாண்டின் 4வது காலாண்டில், உலக வங்கி 45 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்ய உறுதிபூண்டுள்ளதையும் வரவேற்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665261
**********************
(Release ID: 1665289)
Visitor Counter : 274