அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளின் தன்னாட்சி அமைப்புகளின் இயக்குனர்கள்/தலைவர்களுடன் கொவிட் பொருத்தமான நடத்தைகள் குறித்து மத்திய அமைச்சர் திரு.ஹர்ஷ் வர்த்தன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

Posted On: 16 OCT 2020 6:25PM by PIB Chennai

மத்திய‍ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புவி அறிவியல் மற்றும் சுகாதார&குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் இன்று, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளின் தன்னாட்சி அமைப்புகளின் இயக்குனர்கள்/தலைவர்களுடன் கொவிட் பொருத்தமான நடத்தைகள் மீதான பொது இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார்.

எதிர்வரும் மாதங்களில் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் நாடு கூட்டாக ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஹர்ஷ் வர்த்தன் எடுத்துக் கூறினார். மேலும் அவர் கூறுகையி்ல், “ கொவிட்-19-க்கு எதிரான நமது போரில் நாம் பத்தாவது மாதத்துக்குள் நுழைகின்றோம். கடந்த ஜனவரி 8-ம்தேதி வல்லுநர் குழுவுடன் முதல் சந்திப்பை நாம் நடத்தினோம். அப்போதில் இருந்து இந்த பயணம் இடைவிடாமல் தொடர்கிறது. இன்று, கொவிட்-19-க்கு எதிரான நமது போரில் முக்கியமான கட்டமைப்பை நாம் உருவாக்கி உள்ளோம் என்று நாம் பெருமையாக கூற முடியும்,” என்று தெரிவித்தார். ஓய்வறியாமல் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய அனைத்து  கொவிட் போர் வீரர்களுக்கும் ஆழ்ந்த நன்றியையும், வணக்கத்தையும்அவர் தெரிவித்தார். பிறரை காப்பதற்காக தன்னுயிரை ஈந்த கோவிட் போர் வீர ர்களின் மரணம் குறித்தும் அவர் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.  

தங்களது கட்டளைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து விஞ்ஞானிகளும் சிறப்பான பணிகளை மேற்கொண்டதற்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். இன்றைக்கு உலகில் 9 தடுப்பூசி மருந்துகளின் சோதனை நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவில் 3 தடுப்பூசி மருந்துகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதில் ஒன்று ஆய்வக பரிசோதனையில் மூன்றாவது கட்டத்தை நோக்கி முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா விரைவில் உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வெளிப்படுத்தினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665211

**********************


(Release ID: 1665272) Visitor Counter : 181