பிரதமர் அலுவலகம்

என் எஸ் ஜி அமைப்பு தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 16 OCT 2020 10:19AM by PIB Chennai

என் எஸ் ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு வீரர் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி என் எஸ் ஜி கருப்பு பூனை படையின் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “என் எஸ் ஜி தினத்தை முன்னிட்டு, என் எஸ் ஜி கருப்பு பூனை படையின் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பாதுகாப்பு அமைப்பில் என் எஸ் ஜி முக்கிய பங்கை ஆற்றுகிறது. அதீத துணிச்சல் மற்றும் செயல்திறனுடன் அது விளங்குகிறது. நாட்டை பாதுகாப்பதில் என் எஸ் ஜி எடுக்கும் முயற்சிகளை கண்டு இந்தியா பெருமை அடைகிறது," என்று கூறியுள்ளார்.


(रिलीज़ आईडी: 1665036) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam