சுற்றுலா அமைச்சகம்
15 மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் திரு பிரகலாத் சிங் காணொளி வாயிலாக ஆலோசனை
Posted On:
15 OCT 2020 6:09PM by PIB Chennai
15 மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் திரு பிரகலாத் சிங், புதுதில்லியிலிருந்து காணொளி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் சுற்றுலாத் துறை அமைச்சர்களும், இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
உள்நாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்த, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான பயணத்தை எளிதாக்குவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கும் மானியங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் விருந்தோம்பல் துறைக்கான மதிப்பீடு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்கான சாதி முறை குறித்து விரிவாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நிதி என்று அழைக்கப்படும் விருந்தோம்பல் துறைக்கான தேசிய ஒருங்கிணைந்த தரவுத்தளம் அமைக்கும் முயற்சி குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ' எனது தேசத்தை பார்’ என்னும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உள்நாட்டு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
நாளை, மேலும் 21 மாநில சுற்றுலா அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசிக்க உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664838
**********************
(Release ID: 1664931)
Visitor Counter : 203