ஆயுஷ்

'கொவிட்-19 சிகிச்சையில் ஆயுர்வேதம்' என்பது ஐந்தாவது ஆயுர்வேத தினத்தின் மையக்கருத்து

Posted On: 15 OCT 2020 5:27PM by PIB Chennai

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஆயுர்வேதத்தின் பங்கு என்பதை மையமாகக் கொண்டு இந்த வருடத்தின் ஆயுர்வேத தினம் அனுசரிக்கப்படும். கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து தன்வந்தரி பிறந்தநாளை முன்னிட்டு இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த வருடம், நவம்பர் 13ஆம் தேதி ஆயுர்வேத தினம் கொண்டாடப்படும்.

ஆயுர்வேத மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், பல்வேறு நோய்களால் ஏற்படும் மரணத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆயுர்வேத தினத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இந்த வருடம் ஆயுர்வேத முறைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 'கொவிட்-19 சிகிச்சையில் ஆயுர்வேதம்' என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. உலகெங்கிலும் இருந்து சுமார் 1.5 லட்சம் பேர் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் இந்நாளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறித்து ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664815

**********************


(Release ID: 1664870) Visitor Counter : 265