இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

பாரா வில்வித்தை வீரர் திரு அங்கித் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, அவர் சோன்பெட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

प्रविष्टि तिथि: 14 OCT 2020 6:10PM by PIB Chennai

ஹரியானாவின்  சோன்பெட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் நடைபெற்று வரும் தேசியப் பயிற்சியில் கலந்து கொண்டுள்ள பாரா வில்வித்தை வீரர் திரு அங்கித், கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு போதிய சிகிச்சைகளை அளிப்பதற்காக, சோன்பெட்டின் பகவான்தாஸ் மருத்துவமனைக்கு அவர் இன்று மாற்றப்பட்டுள்ளார்.

 

இம்மாதம் ஐந்தாம் தேதி தொடங்கப்பட்ட பயிற்சி முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ அறிக்கை சமர்ப்பித்த பின்பே பயிற்சிகள் தொடங்கப்பட்டன. விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி கடந்த 12ம் தேதி அனைவருக்கும் மறு பரிசோதனை செய்யப்பட்டதில், திரு அங்கித் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன், அவர் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664421

**********************


(रिलीज़ आईडी: 1664552) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu