புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் தலைவர் மற்றும் துணைத் தலைவராக இந்தியா மற்றும் பிரான்ஸ் மீண்டும் தேர்வு

Posted On: 14 OCT 2020 6:10PM by PIB Chennai

சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின்(ISA) 3வது கூட்டத்தில், 34 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 53 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் 5 வருங்கால உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

காணொலி காட்சி மூலம் அக்டோபர் 14ம் தேதி நடந்த சர்வதேச சூரியசக்தி கூட்டணியின்  3வது கூட்டத்தில், தலைவர் மற்றும் துணைத் தலைவராக இந்தியா மற்றும் பிரான்ஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன.  2 ஆண்டு காலத்துக்கு இந்த பதவியில் இந்தியாவும், பிரான்சும் இருக்கும்.

ஐஎஸ்ஏ அமைப்பின் நான்கு பிராந்திய பிரதிநிதியாக 4 துணைத் தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.  ஆசிய பசிபிக் பகுதிக்கு, பிஜி மற்றும் நவ்ரு, ஆப்ரிக்காவுக்கு மொரீசியஸ் மற்றும் நைஜர், ஐரோப்பா மற்றும் இதர பகுதிகளுக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிக்கு கியூபா மற்றும் கயானா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள 10 பொதுத்துறை நிறுவனங்கள் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கான காசோலையை வழங்கின.

இந்த கூட்டத்தில் பேசிய ஐஎஸ்ஏ அமைப்பின் தலைவரும், மத்திய மின்துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சருமான  திரு.ஆர்.கே.சிங், பருவ நிலை மாற்ற பிரச்னைக்கு எதிராக பேராட கூட்டணியில் உள்ள உறுப்பு நாடுகள் ஒற்றிணைந்துள்ளதை பாராட்டினார்.  சூரிய எரிசக்தி கடந்த 5 ஆண்டுகளில் நீண்ட பாதையை கடந்து, தற்போது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் எரிசக்தியாக உருவாகியுள்ளது என கூறினார்.  சூரிய மின்சக்தி ஏற்கனவே , உலகளவில் 2.8% பங்களிப்பை அளித்து வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்து 2030ம் ஆண்டுக்குள், உலகின் பெரும் பகுதிகளில், மின்சார உற்பத்தியில் சூரிய மின்சக்தி முக்கிய இடத்தை பிடிக்கும் எனவும் அமைச்சர் கூறினார். 

ஐஎஸ்ஏ அமைப்பு தொடங்கியுள்ள பல நடவடிக்கைகளையும் அதன் தலைவர் திரு.ஆர்.கே.சிங் குறிப்பிட்டார். உறுப்பு நாடுகளின் மின்சார தேவைக்காக 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பிரம்மாண்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  இவற்றின்  மூலம் 22 நாடுகளில் பயன்படுத்த 2,70,000 சூரிய சக்தி பம்புகள், 11 நாடுகளில் 1 ஜிவா வாட்டுக்கும் அதிகமான  சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் மேற்கூரை தகடுகள், 9 நாடகளில் பயன்படுத்த 10 ஜிகா திறனுள்ள  மின் தொகுப்புகள் தேவை என ஐஎஸ்ஏ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664423

**********************


(Release ID: 1664549) Visitor Counter : 610