சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தலசீமியாவால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய நோயாளிகள் பயன்பெறும் வகையில், இரண்டாம் கட்ட தலசீமியா பால் சேவா யோஜனா திட்டத்தை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
14 OCT 2020 5:33PM by PIB Chennai
தலசீமியாவால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய நோயாளிகள் பயன்பெறும் வகையில், இரண்டாம் கட்ட தலசீமியா பால் சேவா யோஜனா திட்டத்தை இன்று காணொலிக் காட்சி வாயிலாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்.
கோல் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பணியாக கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் தலசீமியா மற்றும் சிக்கில் செல் நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சியில், லக்னோ சண்டிகர் டெல்லி கொல்கத்தா மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் 135 குழந்தைகளுக்கு இலவசமாக இந்த மாற்றுச் சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக மக்கள் தங்கள் பூர்வீக நிலங்களையும் சொத்துக்களையும் விற்று பணம் ஈட்டுவதாக அமைச்சர் தெரிவித்தார். இதனை உணர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத்- பிரதான் மந்திரி ஜன் அரோக்ய யோஜன திட்டத்தைத் துவக்கி இருப்பதாக அவர் கூறினார்.
ஏபிளாஸ்டிக் அனிமியா என்று அழைக்கப்படும் ஒரு வகையான இரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்ட 200 நோயாளிகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664398
**********************
(रिलीज़ आईडी: 1664543)
आगंतुक पटल : 348