சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
எதிர்வரும் குளிர் காலத்தில் மாசு ஏற்படுவதைத் தடுக்க, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், 50 குழுக்களை அமைக்கவிருக்கிறது
Posted On:
14 OCT 2020 4:07PM by PIB Chennai
காற்றின் தன்மையை மேம்படுத்த, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கென பிரத்தியேகமாக 50 குழுக்களை நியமிக்கவிருக்கிறது. இந்தக் குழுக்கள் வரும்15ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் தில்லி, நொய்டா உள்ளிட்ட நகரங்களுக்கும், ஹரியானாவில் பரிதாபாத், பானிபட் உள்ளிட்ட நகரங்களுக்கும், ராஜஸ்தானில் பரத்பூர், அல்வார் உள்ளிட்ட நகரங்களுக்கும் நேரில் சென்று மாசு அதிகம் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்யவிருக்கிறது.
குளிர்காலத்தில் தில்லி மற்றும் தேசியத் தலைநகர் பகுதிகளில் காற்றின் தன்மை, சுற்றுச்சூழலுக்கு சவாலாகவே இருந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக இந்தப் பகுதிகளில் காற்று மாசைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664341
**********************
(Release ID: 1664381)