சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் ஜோசிலா சுரங்கப்பாதை பணியை மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 14 OCT 2020 2:09PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜோசிலா சுரங்கப்பாதை தோண்டும் பணியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்த சுரங்கப்பாதை ஸ்ரீநகர் மற்றும் லே இடையே தேசிய நெடுஞ்சாலை எண் -1-ல் எல்லா பருவ நிலையிலும் செல்லக்கூடிய போக்குவரத்தை ஏற்படுத்தும் மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன்  பிரதேசங்கள் இடையே பொருளாதார வளர்ச்சி, சமூக-கலாச்சார ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். ஜோஜிலா கணவாய்க்கு கீழ் 3000 மீட்டருக்கு கீழ் 14.15 கி.மீ தூரத்துக்கு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.  தற்போது இப்பகுதியில் உள்ள தேசிய நெடுங்சாலை 1-ல் ஸ்ரீநகர் மற்றும் லே இடையே ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே போக்குவரத்து நடக்கும். மீத 6 மாதங்களுக்கு பனி படர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்படும். உலகிலேயே மிக அபாயகரமான சாலையில் இதுவும் ஒன்று.

இங்கு சுரங்கப் பாதை அமைப்பதற்கான திட்டத்தை எல்லைகள் ரோடு அமைப்பு, கடந்த 2013ம் ஆண்டு தயாரித்தது. இதற்கான டெண்டர் முயற்சிகள் 4 முறை தோல்வியடைந்தன.  இறுதியில் இதற்கான  டெண்டர், ஐடிஎன்எல் (ஐஎல் மற்றும் எப்எஸ்)  நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு கடந்த 2018ம் ஆண்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஐஎல் மற்றும் எப்எஸ் நிறுவனவத்தின் நிதி நெருக்கடி பிரச்னை காரணமாக இத்திட்டம் தடைபட்டது. இதனால் இந்த ஒப்பந்தம் கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.

அதன்பின், இதற்கான திட்டத்தை மத்தியமைச்சர் திரு.நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் மறு ஆய்வு செய்தார். இத்திட்டம் மத்திய சாலை போக்குவரத்து துறை தலைமை இயக்கனர் ஐ.கே. பாண்டே தலைமையிலான நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுரங்கப்பாதை நிபுணர்களுடன் ஆலோசித்து தாக்கல் செய்யப்பபட்ட அறிக்கைக்கு கடந்த மே மாதம் மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து இந்த சுரங்கப் பணியை மெகா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. ரூ. 4509. 50 கோடி மதிப்பில் இந்த பணி டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதை தோண்டும் பணியை மத்தியமைச்சர்  திரு. நிதின் கட்கரி நாளை தொடங்கி வைக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664292

**********************


(Release ID: 1664347) Visitor Counter : 184