பாதுகாப்பு அமைச்சகம்

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இறுதி ஈவுத்தொகையை அரசுக்கு செலுத்தியது

प्रविष्टि तिथि: 13 OCT 2020 5:52PM by PIB Chennai

ஹைதரபாத்தை சேர்ந்த பாதுகாப்பு தளவாடங்கள் பொதுத் துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், ரூ 35.018 கோடியை இறுதி ஈவுத்தொகையாக அரசுக்கு செலுத்தியது.

 

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான  கமோடோர் (ஓய்வு) சித்தார்த் மிஷ்ரா, இறுதி ஈவுத்தொகையான ரூ 35.018 கோடிக்கான காசோலையை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கிடம் புது தில்லியில் இன்று வழங்கினார்.

 

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் துறை செயலாளர் திரு ராஜ்குமார், இணை செயலாளர் (ஏரோ) திரு சந்திராகர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

 

விற்பனை விற்றுமுதலாக ரூ 3,095.20 கோடியையும், வரிக்கு முந்தைய லாபமாக ரூ 742.25 கோடியையும் 2019-20-ஆம் ஆண்டில் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் எட்டியது.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664040

********

(Release ID: 1664040)

 


(रिलीज़ आईडी: 1664238) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Telugu