நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 2020-21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலில் நெல் கொள்முதலுக்கு சிறப்பான வரவேற்பு

Posted On: 13 OCT 2020 6:38PM by PIB Chennai

2020- 21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதல் தொடங்கியுள்ளதையடுத்து, கடந்த ஆண்டைப் போலவே,

இந்த வருடமும் அதே குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களைக் கொள்முதல் செய்கிறது.

இதற்கான நெல்லின் கொள்முதல் பல்வேறு மாநிலங்களில் பெருமளவு அதிகரித்துள்ளது. அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்திய உணவு நிறுவனம், பிற அரசு முகமைகளுடன் இணைந்து, 9164.30 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 48.53 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை, 4.16 லட்ச விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

மேலும், மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 41.67 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், ஹரியானா, உத்திரப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைப்போல 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

அக்டோபர் 12ஆம் தேதி வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் 4.53 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில்  630.06 மெட்ரிக் டன் அவரை விதையும் உளுந்தும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 554 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பருத்தி விதைகளுக்கான கொள்முதல், அக்டோபர் 12ஆம் தேதி வரை 12252 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 43476 பேல்களை, இந்திய பருத்தி நிறுவனம் 8943 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664069

**********************



(Release ID: 1664146) Visitor Counter : 206